தமிழின் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவர் தான் சிம்பு. இவர் தனது தந்தை டி.ஆரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். சிறிது காலம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவருக்கு மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கால சுழற்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. இதன் பெரிய வெற்றிக்குப் பின்னர் சிம்பு பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு, ஹன்சிகாவுடன் இணைந்து மகா, பத்து தல,கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது டி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் அவருடன் சிம்புவம் சென்றுள்ளார். இதனால் கொரனா குமார் படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு தனது 47வது படமாக கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு இறுதி கட்டத்தை எட்டயுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் வாங்கியுள்ளது. இதனால் இந்த படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என்று சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இது ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இருந்தது. மேலும் பாடல் லிரிக்கல் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இரண்டும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் படம் குறித்து எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், செப்டம்பர் 15ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..