வெந்து தணிந்தது காடு படம் இன்று வெளியாகி மூன்றாவது நாள் நிறைவடைந்துள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், படத்தின் வசூல் நல்ல கணிசமான தொகையை எட்டி இருக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடித்து வெளிவந்த படம் தான் வெந்து தணிந்தது காடு. அச்சம் என்பது மடமையடா, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இதனால் மூன்றாவது முறையாக வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியிருந்தது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த படம் தமிழகமெங்கும் உள்ள திரையரங்கங்களில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி போன்றவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதை குறித்து பார்க்கும் பொழுது கிராமத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் மும்பைக்கு சென்று அங்கு எப்படி டானாக மாறுகிறார் என்பதுதான். ஏற்கனவே இந்த கதையை தமிழ் பல படங்களில் எடுத்துள்ளதால், எந்த ஒரு புதிய மாற்றத்தையும் இந்த படம் கொடுத்ததாக தெரியவில்லை. ஆனால் சிம்புவின் நடிப்பிற்காக இந்த படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருந்தார். மேலும் படத்தில் பல லாஜிக் ஓட்டைகளும், படத்தின் மூன்று மணி நேரம் நீளமும் சலிப்பை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்து தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் தமிழக முழுவதிலும் 26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வார இறுதி நாட்கள் என்பதால் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூல் சுரேஷின் வசனத்தில் சொல்ல வேண்டும் என்றால் வெந்து தணிந்தது காடு படத்தின் வசூலுக்கு ஒரு வணக்கத்தை போடு.