சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளது. இருப்பினும் இப்படம் குடும்ப ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இருப்பினும் வேட்டையன் வசூலை வாரி குவித்து வருகிறது. இப்படம் உலகளவில் சுமார் ரூ .158கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் கேரளாவில் மட்டும் இதுவரை இப்படம் ரூ .10 கோடி வசூலை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்றால் அது விஜய்க்கு என்றே சொல்லலாம்.
அவரின் படங்கள் தான் அங்கு வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.இந்நிலையில் வேட்டையன் படம் தற்போது கேரளாவில் நல்ல வசூலை பெற்று வேட்டையன் படத்தையே தோற்கடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வரும் வாரங்களில் வேட்டையன் படம் அதிக வசூலை பெரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.