Categories: சினிமா

சொடக்கு போட்டா சம்பவம்தான்..! வெறித்தனமாக வெளியாகிய வேட்டையன் படத்தின் ட்ரைலர்..!

வெளியிட்டது

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் மாபெரும் ஹிட்டுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படத்திற்கு உள்ளது. ரசிகர்கள் இப்படத்தினை காண ஆவலுடன் காத்து உள்ளனர். ஜெயிலர் படத்தை போலவே இந்த படத்திலும் அமிதாப்பச்சன் , ராணா , ரித்திகா சிங் , மஞ்சு வாரியார் என பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சொடக்கு போட்டா சம்பவம்தான்..! வெறித்தனமாக வெளியாகிய வேட்டையன் படத்தின் ட்ரைலர்..! 1

லைக்கா நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகி இருக்கிறது.ஜெய் பீம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் ஞானவேல் இப்படத்தினை இயக்கி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டு இருக்கிறது. இப்படம் அக்டொபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

தற்போது இன்று படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தின் எதிர்பார்ப்பினை ட்ரைலர் அதிகரித்து இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : SUN TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்