பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் விசித்ரா மற்றும் தினேஷிற்கு இடையே சண்டை தொடர்கிறது. இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது விசித்ரா அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய சம்பவம் தற்போது கிடைத்திருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசித்ரா மற்றும் தினேஷ் இருவரும் இந்த நிகழ்ச்சியின் போதே ஒருவரை ஒருவர் மிக கடுமையாக வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர். விசித்திரா ஒரு படி மேலே சென்று தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எல்லாம் விமர்சித்திருந்தார்.

இது தினேஷுக்கும், தினேஷின் பெற்றோர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து ‘அண்டாக்காகசம்’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தனர். அப்போது விசித்ரா தனது அணியில் தினேஷ் இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் தினேஷ் விசித்ராவுடன் இணைந்து விளையாட போவதில்லை என்று முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷை தன் அணியில் சேர்க்க நிகழ்ச்சி குழுவினரிடம் விசித்ரா கூறி இருக்கிறார். ஆனால் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்த வித்ராவுடன் என்னால் இணைந்து விளையாட முடியாது என்று தினேஷ் மறுத்து இருக்கிறார்.
எனவே விசித்ரா இதனால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் எனக்கூடும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறி பாதியிலேயே வெளியேறி இருக்கிறார். இது ஒரு கேம் ஷோ என்று எவ்வளவோ முறை கூறியும் விசித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பாதியிலேயே வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இத்தனை நாட்கள் ஆன பின்னும் இன்னும் வன்மத்தை விடாமல் இருக்கிறார்களே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.