பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகை விசித்ரா முதல் முறையாக விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் பிக் பாஸ் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு படங்களில் குணச்சித்திரம், துணை வேடங்கள், காமெடி வேடங்கள் என்று நடித்து பிரபலமானவர் விசித்ரா. வடிவேலு, கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து கலக்கி வந்தார். பின்னர் சில காரணங்களால் திரைத்துறையை விட்டு விலகிய அவர், மீண்டும் பிக் பாஸ் மூலமாக திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வருவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் 100 நாட்களுக்குப் பிறகு விசித்ரா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக வயது உடையவர் 100 நாட்களைக் கடந்த சாதனையை விசித்ரா மட்டுமே படைத்திருந்தார். பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் பேட்டி அளித்திருக்கும் அவர், “பிக் பாஸ்க்கு பின்னர் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு மிக நன்றாக இருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் தற்போதைய தலைமுறையும் தனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். தன்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள். உண்மையிலேயே அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் யார் உண்மையாக இருக்கிறார்கள்? யார் பொய்யாக இருக்கிறார்கள்? என்று கணிக்க முடியாது. அப்படி கணித்திருந்தால் நான் டைட்டில் ஜெயித்து இருப்பேனே.? பிக்பாஸ் வீட்டில் நான் கற்றுக் கொண்டது, தற்போதைய சந்ததியினருடைய கருத்துக்கள், நடவடிக்கைகள் அனைத்தையும் புரிந்து கொண்டேன். உள்ளிருந்து பார்க்கும் பொழுது ஒரு மாதிரி இருக்கிறது. வெளியில் இருந்து நீங்கள் பார்க்கும் பார்வை வேறு விதமாக இருக்கிறது. சில நேரங்களில் நான் என்ன செய்தேன் என்பதை எனக்கு தெரியவில்லை. நான் யாரையும் புண்படுத்தவில்லை” என்று கூறி இருக்கிறார். அந்த முழு பேட்டியை நீங்களும் காண..! கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O