தமிழ் சினிமாவின் உயரம் தொட்ட நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தனது அசாத்தியமான நடிப்பால் பல லட்ச ரசிகர்களை தனது வசம் ஆக்கி இருக்கிறார் இவர். வலிமை படத்திற்கு பிறகு இவரது படங்கள் எதுவும் வெளியாகாததால் , ரசிகர்கள் அடுத்தப்படத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கின்றனர். லைக்கா தயாரிப்பில் மகிழ் இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரெஜினா கேசன்ட்ரா, அர்ஜுன் , ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தற்போது தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. இதுவரை படத்தின் அறிவிப்பு தேதி வெளியாகாத நிலையில் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். தற்போது அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது .
இந்நிலையில் இன்று மாலை படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறி வந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்துவிட்டதாக படக்குழு அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.