Categories: சினிமா

விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு…! வாங்க எல்லாரும் போட்டோ எடுப்போம்..! படக்குழுவுடன் அஜித்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் யாரும் தொடமுடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித்குமார் . இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார் நடிகர் அஜித். இவரின் படங்கள் வெளியாகும் நாள் தான் இவரின் ரசிகர்களுக்கு பொங்கல் தீபாவளி எல்லாம், அந்தளவுக்கு அஜித்தை அவரது ரசிகர்கள் நேசிக்கின்றனர்.

விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு...! வாங்க எல்லாரும் போட்டோ எடுப்போம்..! படக்குழுவுடன் அஜித்..! 1

அஜித்திற்கு வெளியாகும் படங்கள் தற்போது எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறாமல் உள்ளது. வலிமை படத்திற்கு பிறகு அஜித் கதைகளை கவனிப்புடன் கேட்டு ஒப்புக்கொண்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பெரிய இடைவெளிக்கு பிறகு த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக மீண்டும் இப்படத்தில் நடித்து உள்ளார். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ஆனது ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. இதனை அஜித்துடன் சேர்நது படக்குழு புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளது. புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்