இன்று இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் விடுதலை. தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், படம் நேஷனல் அவார்டு கூட வாங்குவதற்கு தகுதியான ஒரு படம் என்றும் சிலாகித்து பேசி வருகின்றனர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒருவர் கூட படம் நன்றாக இல்லை என்று கூறவே இல்லை. பலரும் படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். குறிப்பாக சூரியின் நடிப்பும், விஜய் சேதுபதி நடிப்பும் மிகப் பிரமாதமாக வந்திருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நான் விடுதலை. இந்த திரைப்படம் பிரபல எழுத்தாளராக இருக்கும் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதையான துணைவன் என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. போலீஸ் அதிகாரியாக ஹீரோவாக சூரி முதன்முதலாக இந்த படத்தில் களம் இறங்கி இருந்தார். ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரடு குமார் இந்த படத்தை தயாரித்து இருந்தார். ஆரம்பத்தில் இந்த படத்தில் மறைந்த வீரப்பன் கதாபாத்திரத்தில் சூரி நடித்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்தத் தகவல் அனைத்தும் வதந்திகள் என்று படக்குழுவினர் மறுத்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க இருந்தார். பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரும் படத்திலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியிட்டு இருக்க தயாராகியிருந்தது. ஆரம்பத்தில் ஒரே பாகமாக எடுக்க முயற்சி செய்த இந்த படம் நீளம் கருதி இரண்டு பாகங்களாக உருவாகியிருந்தது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இருந்து உன்னோடு நடந்தா, காட்டு மல்லி போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் டீசர் ட்ரெய்லர் அனைத்தும் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருந்தது. படத்தில் சூரி ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக போலீஸ்களுக்கு உள்ளிருந்தே போராடும் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் மிரட்டி இருந்தார். ட்ரைலரை பார்த்த போது வெற்றிமாறன் தரமான சம்பவம் செய்திருப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது படம் பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் அதே கருத்தைதான் கூறி வருகின்றனர். படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், கண்டிப்பாக இந்த படத்திற்கு நேஷனல் அவார்டு கூட கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெற்றிமாறன் சம்பவம் செய்துள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவர்கள் கூறிய கருத்தை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Connecting