விடுதலை படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடலாக “காட்டு மல்லி” என்கிற பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தான் விடுதலை. இந்த படம் வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதையான “துணைவன்” என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிறுவனத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்தின் எல்ரட் குமார் தயாரித்து வருகிறார். மேலும் கௌதம் வாசுதேவன் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் ஆரம்பத்தில் மறைந்த வீரப்பனின் கதாபாத்திரத்தில் சூரி நடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை அனைத்தும் வதந்தி என்று படக்குழுவினர் அந்த தகவலை மறுத்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஜி.வி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ இந்த படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சூரி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் போலீஸாக களம் இறங்கி இருக்கின்றனர். இவர்களை எதிர்க்கும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். கடந்த வருடம் ஜனவரி மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருந்தது. ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நிலை காரணம் காட்டி அவர் இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். படத்தின் நீளம் கருதி தற்போது இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. முதல் பாகத்திலிருந்து “உன்னோடு நடந்தா” என்கிற தனுஷ் பாடிய பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலாக “காட்டு மல்லி” என்கிற பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், தற்போது படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை இளையராஜாவை பாடியிருக்கிறார். கேட்க இனிமையாக இருக்கும் அந்த பாடலை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sony Music South