Categories: சினிமா

முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க.! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்.!

வெளியிட்டது

கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் தலைப்புச் செய்தியாக இருக்கும் ஒரு விஷயம் நயன்தாரா விக்னேஷ் சிவனின் வாடகைத்தாய் பிரச்சனை தான். மூன்று நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் நயன்தாராவும் பெற்றோர்கள் ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது என்று விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது ரசிகர்கள் ஒருபுறம் சந்தோஷப்பட்டனர், ஆனால் பலர் விஷமத்தனமாக இந்த குழந்தைகளின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்பினர். இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் தான் பெறப்பட்டது என்றும் அவர்கள் பேசி வந்தனர். வாடகை தாய் முறையில் குழந்தை பெற வேண்டுமானால் இந்தியாவில் பல வழிகாட்டு நெறிமுறைகள், சட்டதிட்டங்கள் உள்ளன. அதையெல்லாம் முறையாக பின்பற்றவில்லை என்று நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் மீது சர்ச்சை எழுந்தது.

முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க.! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்.! 1

வாடகைத தாய் முறையில் குழந்தை பெறுவதற்கு முதலில் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் நயன்தாராவிற்கு திருமணமான நான்கே மாதங்களில் குழந்தை பிறந்துள்ளது முதல் சர்ச்சையை கிளப்பியது. அதன் பின்னர் வாடகை தாய் பெறுவதற்கு தம்பதிகளில் இருவரில் ஒருவருக்காவது குழந்தை பேறு இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் வாடகை தாய் தம்பதிகளில் நெருங்கிய உறவினர்களில் ஒருவர்தான் இருக்க முடியும். இது போன்ற பல வழிகாட்டுதல்கள் வாடகைத்தாய் முறையில் இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் திருமணமான நான்காவது மாதமே இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து விளக்கம் கேட்டு அரசும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பல எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கிறது. இந்த எதிர்ப்புகளுக்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது விக்னேஷ் சிவன் instagramயில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். தொடர்ந்து இந்த வாடகைத்தாய் பிரச்சனைக்கு பதிலடி தரும் விதமாகத்தான் அவர் இது போல் பதிவிட்டு வருகிறார் .எல்லாம் சரியான தருணத்தில் உங்களுக்கு கிடைக்கும். பொறுமையாக இருங்கள், நன்றியுடன் இருங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் அன்னை தெரசாவின் வாசகங்களை பதிவாக போட்டு இருக்கிறார். அதில் நீங்கள் இந்த உலகத்தை மாற்ற வேண்டுமென்று நினைத்தால், முதலில் உங்கள் குடும்பத்தை சென்று பாருங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். இது அனைத்துமே வாடகைத்தாய் பிரச்சனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அவர் பகிர்ந்து வருகிறார் என தெரிகிறது.

Youtube Video Code Embed Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்