நயன்தாரா தனது கணவனின் 37வது பிறந்தநாள் விழாவிற்காக செய்த சர்ப்ரைஸ் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் இவர் பெயர் டயானா குரியன் ஆகும். இவர் மலையாள டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். பின்னர் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் இன்று தமிழின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படம் நடித்துக் கொண்டிருந்தபோது காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் பலரும் நேரில் வந்து வாழ்க்கை இருந்தனர்.

திருமணத்திற்கு பின்பு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூனுக்கு சென்றனர். பின்னர் இந்தியா திரும்பிய அவர்கள் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்தனர். நயன்தாரா தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் நடித்து வந்தார். விக்னேஷ் சிவன் அஜித்குமாரை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இதனால் பிஸியாக இருந்த இவர்கள் இரண்டாவது முறையாக ஸ்பெயினுக்கு ஹனிமூன் சென்றனர். அந்த புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இன்று விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் விக்னேஷ் சிவனக்கு நயன்தாரா பிறந்தநாள் சர்பிரைஸ் ஒன்றை செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக துபாய் சென்றிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா முன்பு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர். இதற்காக நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வேற லெவலில் ஆச்சரியம் ஒன்றை செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் உறவினர்களை விக்னேஷ் சிவனுக்கே தெரியாமல் துபாய்க்கு வரவழைத்து அவருக்கு கேக் வெட்டி சர்ப்ரைஸ் செய்து இருக்கிறார் நயன்தாரா. குறிப்பாக விக்னேஷ் சிவனின் தாய் மற்றும் தந்தையை துபாய்க்கு அழைத்துச் சென்றிருக்கிறார் நயன்தாரா. திருமணம் நடந்து தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு ஆசை மனைவியின் முதல் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி. விக்னேஷ் சிவனின் 37 வது பிறந்த நாளுக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.