தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முண்ணனி நடிகையாக இருப்பவர்தான் நயன்தாரா. கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்து ஒரு சிறிய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தனது கடுமையான முயற்சி மற்றும் திறமையால் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். ஐயா என்ற தமிழ்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் பிரபு தேவாவுடன் காதல் ஏற்பட்டது. அந்த காதல் முறிவுக்குப் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவ்விங் வாழ்க்கையில் உள்ளார். நயன்தாரா சில படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளனர். வீடியோ கீழே உள்ளது..

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். அடிக்கடி கோவிலுக்கு செல்வது, வெளிநாடு செல்வது, ட்ரிப் போவது என்று இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றனர். அப்போது அவர் திருமணமானவர் போல நெற்றியில் குங்குமம் வைத்து இருந்தார். இதனால் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று சிலர் புரளியை கிளப்பி வருகின்றனர். வேறு சிலரோ விக்னேஷ் மற்றும் நயன்தாராவுக்கு நிச்சயம் முடிந்துள்ளது, இருவரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தங்கள் பங்கிற்கு ஒரு கதையை சொல்லி வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Galatta Tamil
ஆனால் இது எதுவுமே நயன்தாரா தரப்பில் இருந்து உறுதிபடுத்தப்படவில்லை. தற்போது இருவரும் திருச்சியில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வக் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். திருமண உத்தரவு கேட்க திருச்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றதாக விக்னேஷ் சூசகமாக கூறியுள்ளார் .அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..