இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதோடு யோகி பாபு , பிரபல இயக்குனர் செல்வராகவன் , vtv கனேஷ் , அபர்ணா தாஸ் என பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது விஜயின் பீஸ்ட்

திரைப்படத்தின் ஷூட்டிங் கோகுல் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து நேற்று கோகுலம் ஸ்டுடியோஸில் தளபதியை சந்தித்துள்ளார் தல தோனி. சினிமாவில் விஜய்க்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ , அதே போல தோனிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளம். மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகள் டுபாயில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தோனி மற்றும் சக வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தோனி விஜயை சந்தித்துள்ளார். இதை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். இதை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் ல என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை photoshop செய்து தன் முகத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.