Categories: சினிமா

லவ் யூ தங்கமே.! பிறந்த நாள் சர்ப்ரைஸ் செய்த நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்

வெளியிட்டது

விக்னேஷ் சிவன் சமீபத்தில் தன்னுடைய 36-வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை துபாயில் நயன்தாரா சர்ப்ரைஸாக ஏற்பாடு செய்திருந்தார். விக்னேஷ் சிவனின் குடும்பத்தாரை அவருக்கே தெரியாமல் துபாய்க்கு வர வைத்து பெரிய அளவில் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் நயன்தாரா. இது குறித்து தற்போது instagram-யில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி இது விக்னேஷ் சிவனுக்கு முதல் பிறந்தநாள் என்பதால் நயன்தாரா அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி இருந்தார். அப்போது துபாய்க்கு சென்று நடுக்கடலில் வைத்து கேக் வெட்டியும் அவர்கள் உறவினர்களை அழைத்து வந்தும் அவர் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.

லவ் யூ தங்கமே.! பிறந்த நாள் சர்ப்ரைஸ் செய்த நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன் 1

இது குறித்து நெகிழ்ச்சியான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். உன்னுடன் இது என்னுடைய 8வது பிறந்தநாள் தங்கமே..! ஒவ்வொரு பிறந்தநாளையும் முந்தைய பிறந்தநாளில் இருந்து கூடுதல் சிறப்பானதாக மாற்றுகிறாய், ஆனால் இந்த பிறந்தநாள் ரொம்ப உணர்ச்சிவசமானது, நீ என் காதலியாக இருப்பதற்கு மிக்க நன்றி, என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்வது எது என்று உனக்கு நன்றாகத் தெரியும், அதை நீ எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் பல ஆண்டுகள் அன்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருகட்டும் உன்னை நேசிக்கிறேன் மற்றும் நீ என்னை நேசிக்கும் விதம் மேலும் மேலும் பெருகட்டும் !! என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தன் அம்மாவை பற்றி கூறும் போது, என் அம்மாவை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வதும், உயரமான கட்டிடங்கள், புதிய மனிதர்கள் மற்றும் புதிய விஷயங்களைப் பார்க்கும் போது அவள் முகம் மாறுவதைப் பார்ப்பதும் எப்போதுமே ஒரு கனவுதான், அவள் முகத்தில் நான் தேடும் மகிழ்ச்சி. சாதனை உணர்வு, நான் செய்யும் அனைத்து கடின உழைப்புக்கும் அர்த்தம் தருகிறது! வாழ்க்கை எனக்கு வழங்கிய அனைத்து நல்ல விஷயங்களுக்கும் மேலாக செல்கிறது! இந்த சில நாட்களில் நீங்கள் நல்ல மற்றும் பெரிய விஷயங்களுக்காக வெளிப்படுகிறீர்கள். இந்த ஆண்டு எனது பிறந்தநாளைச் சுற்றியுள்ள தருணங்கள் … எனது குடும்பத்தினருடன் துபாய்க்குச் சென்ற நாட்கள் மற்றும் அவர்களுடன் நான் நேசித்த உற்சாகமும் மகிழ்ச்சியும் எப்போதும் என் இதயத்தில் சூடாக இருக்கும். இப்போது எனது பட்டியல் விருப்பங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற செய்ததற்காக கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி என்று பதிவிட்டு இருந்தார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்