இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று முக்கிய பிரபலமாகி உள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான “போடா போடி” படம் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானாலும் அவருக்கு முதல் வெற்றியை கொடுத்த படம் “நானும் ரௌடி தான்” . 2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா.ஆர்.பார்த்திபன் என பலர் நடிக்க, அனிருத் இசையில் வெளியான இந்த படம் மிக பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது மட்டுமில்லாமல் இந்த படம் மூலம் நயந்தஹராவிடம் அறிமுகமானார்.

அடுத்து சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்”. படம் நன்றாக இருந்த போதிலும் பெரிய வெற்றியை பதிவு செய்ய தவறியது. நடுவில் “பாவக்கதைகளில்” ஒரு எபிசொட் இயக்கி இருந்தார். மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து நயன்தாரா, சமந்தா கூட்டணியில் “காத்துவாக்குல ரெண்டு படம்” இயக்கினார். ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பையே மக்களிடம் பெற்றது. இதனை அடுத்து தான் நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்னரே நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது விக்னேஷ் தான் என அந்த படத்தை தயாரிக்கவுள்ள லைகா ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போதிலிருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிகவும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஏனெனில் நடிகர் அஜித் தொடர்ந்து ஆக்ஷன் படங்களையே நடித்து வருவதால் நல்ல ஜனரஞ்சகமான படங்கள் எடுக்கும் கொடுக்கும் விக்னேஷ் படத்தை ஓகே செய்ததிலேயே இந்த எதிர்பார்ப்பு.
திருமணம் முடிந்து இந்திய திரும்பியுள்ள விக்னேஷ் அந்த வேலைகளில் மும்முரமாக இறங்குவதற்கு முன்னால் அவருக்கு இப்பொது மற்றொரு மிக பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, சென்னையில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாடு நிகழ்ச்சியின் துவக்க விழாவை தான் விக்கி தற்போது இயக்க போகிறாராம். 44வது செஸ் ஒலிம்பியாடு ஜுலை 28 ம் தேதி துவங்கிய ஆகஸ்ட் 10 ம் தேதி வரை மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது. இதன் துவக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை தான் விக்கி படமாக இயக்க உள்ளார். விக்கி இயக்க போகிறார்.
உலகநாடுகள் நோக்கும் இந்த போட்டியின் காட்சி படத்தை அவர் எடுக்கவுள்ளதால் அது சிறப்பாக வந்தால் மிக அளவில் பாராட்டுகளையும், பெரிய ரீச்சும் அடைவார் விக்னேஷ் சிவன். இது போன்ற ஒரு வாய்ப்பு இவருக்கு திருமணம் முடிந்த வேலையில் கிடைத்துள்ளதால், பலரும் நயன் கழுத்தில் தாலி கட்டிய நேரம் தான் விக்னேஷிற்கு இவ்வாறு வாய்ப்புகள் வருகிறது என கூறி வருகிறார்கள்.