“எது வாரிசா?”!!”எல்லாமே போச்சே என புலம்பி தவிக்கும் விஜய் ரசிகர்கள்”!! வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீமஸ்ஸுகளால் நிறையும் சோசியல் மீடியா!!!

வெளியிட்டது

"எது வாரிசா?"!!"எல்லாமே போச்சே என புலம்பி தவிக்கும் விஜய் ரசிகர்கள்"!! வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீமஸ்ஸுகளால் நிறையும் சோசியல் மீடியா!!! 1

தமிழ் சினிமாவின் இப்போதைய உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். கலவையான விமர்சனம் பெற்றாலும் இவருடைய படங்கள் எளிதாக 200 கோடி வசூலை தாண்டிவிடுகிறது. பல நல்ல விமர்சங்களை பெற்றாலும் முன்னணி நாயகர்கள் சிலரால் கூட இந்த வசூலை எட்ட முடியாத நிலை உள்ளது.தந்தையின் இயக்கத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். முதல் படம் இவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல், முயன்று 5 ஆண்டுகள் கழித்து விக்ரமனின் “பூவே உனக்காக” படத்தில் தன்னுடைய முதல் பெரிய வெற்றியை பதிவு செய்தார்.

அதன் பின் தொடர்ந்து லவ் டுடே, காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ப்ரியமானவளே, ஃப்ரண்ட்ஸ், என காதலை மையமாக கொண்டு நடித்து வந்த இவர் பின் ஆக்ஷன் படங்கள் நடிக்க துவங்கினர். 2005ஆம் ஆண்டு வெளியான “கில்லி” படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான மைல்கல். இந்த படத்திற்கு பின் முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக மாறி போக்கிரி, வேட்டைக்காரன் என படங்கள் கொடுத்தாலும் மிக பெரிய சறுக்கலை அந்த காலகட்டத்தில் சந்தித்தார். அனைத்தையும் சரிசெய்து கொண்டு மீண்டும் “துப்பாக்கி” படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பினார்.

அதன் பின் தொடர் வெற்றி படங்களே. கத்தி, தெறி, மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர் என அனைத்தும் பாக்ஸ் ஆஃபிஸில் மிக பெரிய அளவில் வசூல் வேட்டையாடிய படங்கள். மிக பெரிய உச்சத்தை விஜய் இப்பொது தொட்டுள்ளார். இதற்கு சான்று அண்மையில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயுடன், பூஜா ஹெக்டே, செல்வராகவன்,வி.டி.வி கணேஷ் என பலர் நடித்த இந்த படம் மிகவும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் இந்த ஆண்டின் இப்போதைய அதிக வசூல் செய்த தமிழ் படமாக 230 கோடிக்கு மேல் அசால்ட்டாக வசூல் செய்துளளது இந்த படம்.

விஜய் கேரளாவிலும் பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். அதே போல இப்போது தெலுங்கிலும் தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்த அவர் தன்னுடைய அடுத்த படமான “T66” படத்தில் பணியாற்றும் பலரையும் தெலுங்கில் அதிகம் அறியப்பட்டவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனரான வம்ஷி படிப்பள்ளியுடன் கை கோர்த்துள்ளார் விஜய்.

இவர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியான “மஹரிஷி” என்ற 2019ஆம் படத்திற்காக சிறந்த முழு பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றவர் ஆவார். அதே பெரிய தயாரிப்பாளரும், விநோயிகிஸ்தருமான ‘தில்’ ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.  இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள விஜயும், “தில்” ராஜுவும் இயக்குனர் வம்சிக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளனர். குடும்பப்பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விஜயுடன் நிறைய தெலுங்கு நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்பொது தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நாயகியான ரஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன், காமெடி நடிகர் பிரமானந்தம், துணை நடிகர் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் என நிறைய தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான, பரிட்சியமான முகங்கள் படத்தில் பலர் உள்ளனர். அவர்கள் போக தமிழ் ரசிகர்களுக்காக சரத்குமார், குஷ்பூ, பிரபு, ஷியாம் போன்றோரும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஹைதராபாதில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் செட் அமைத்து துவங்கிய படப்பிடிப்பு இப்பொது சென்னையில் 2வது கட்டப்படப்பிடிப்பை துவங்கியுள்ளது. துவங்கிய முதலே படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. இப்பொது படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை குஷ்பூ, ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜயின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் படக்குழு அதனை குறித்து எந்த வித அச்சமும் இன்றி அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மும்முரமாக நடந்து வருகிறது. மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கொண்டு வர ஆயுதமாகி வருகிறது படக்குழு. இதனால் விரைவில் அடுத்தடுத்த ப்ரோமோஷன் பணிகளையும் மேற்கொள்ள தயராகிருக்கிறார்கள்.

இப்பொது நாளை தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் ரசிகர்களுக்கு பரிசாக “தளபதி 66” படக்குழு, அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. இதனை கண்டா ரசிகர்கள் பலரும் இது என்னடா எப்படி பேசி பார்த்தாலும் மாஸ்’வே இல்லை என்ன பண்றது என குழம்பி போய் உள்ளார்கள்.

நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் பல்வேறு வகையிலான மீம்ஸ், ட்ரோல்ல்ஸ் என சோசியல் மீடியாவே இதனால் அலறி வருகிறது. அகில் சிலவற்றை இங்கு காண்போம்.

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப பின்னனியில் உருவாகுவதால் இந்த மாதிரியான ஒரு டைட்டில் வைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜயின் மாஸ் இமேஜ் கொஞ்சம் நினைவில் வைத்து இன்னும் கொஞ்சம் வேறுமாதிரியான டைட்டில் கொடுத்திருக்க வேண்டும் என விஜயன் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்