Categories: சினிமா

விஜய் ஆண்டனி நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம்.! “ர த் த ம்” படத்தின் ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

நடிகரும் இசையமைப்பாளருமாக இருக்கும் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இசையமைப்பாளராக வாழ்க்கை தொடங்கிய விஜய் ஆண்டனி நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்தவர். தற்போது இவர் ரத்தம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் ஆண்டனி நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம்.! "ர த் த ம்" படத்தின் ட்ரைலர் இதோ.! 1
படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது டைட்டிலில் இருப்பது போலவே படம் முழுவதும் ரத்தக் களரியாக காட்சியளிக்கிறது. ஒரு சமூக பிரச்சனையை மையமாக வைத்து களத்தில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி. பின்னர் அவரையும் அவரது குழுவையும் காவல்துறையினர் எப்படி பிடிக்கிறார்கள் என்ற சுவாரசியத்துடன் ட்ரைலர் நகர்கிறது. வழக்கமான க்ரைம் தில்லர் படமாக இல்லாமல் புதுவிதமாக இயக்குனர் இந்த கதையை சொல்ல முயற்சிக்கிறார். இன்றைய காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்கள், அதன் மூலம் நடக்கும் குற்றங்கள், அரசியல்வாதிகளின் முறைகேடுகள், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் என்று பல அரசியலை இந்த படம் பேசுகிறது.

விஜய் ஆண்டனி உடன் இணைந்து மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி எஸ் அமுதன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த சில படங்கள் சரியாக கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ரத்தம் படம் வெற்றியை பெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்