தளபதி விஜய் தற்போது ஆந்திராவில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்த நிலையில் தற்போது அவர் தனது ரசிகர்களுக்காக வெளியில் வந்து கையசைத்து சென்றிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் தற்போது அந்த காணொளியை இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். தளபதி விஜய் குறித்து சொல்லவே தேவையில்லை. அவருக்கு தமிழகத்தில் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த ஒரு நடிகராக இருக்கிறார் தளபதி விஜய். 50 வயதை நெருங்கி இருக்கும் தளபதியை பார்க்கும் எவருமே அவருக்கு 50 வயது என்று சொல்ல முடியாத அளவிற்கு கட்டுடல் அமைப்பும், அழகும் இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறார். பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகனான இவர் 1984 ஆம் ஆண்டு வெற்றி என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் விஜய்யை பார்த்த பலரும் அவரை உருவாக்கியது செய்திருக்கின்றனர். தயாரிப்பாளர்கள் பலரும் இந்த முகம் எல்லாம் தமிழ் திரையுலகில் தேறாது என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் மூன்று படங்களுக்கு பின்னர் தனது கேரியரை ஆரம்பித்த விஜய் இன்று இந்தியாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படத்திற்கு பின்னர் மிகவும் அறியப்பட்ட நபராக மாறிப் போயிருக்கிறார். சுமார் 67 படங்களில் தற்போது வரை நடித்து முடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். துப்பாக்கி, தலைவா, ஜில்லா, வேட்டைக்காரன், கத்தி, தெறி, மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர் போன்ற பல வெற்றி படங்களின் நடித்து முடித்திருக்கிறார் விஜய். தற்போது அவர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது 67 வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, இயக்குனர் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்து முடிந்திருந்தது. தற்போது படம் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் சில சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட இருப்பதாக தகவல் கசிந்த வண்ணம் இருக்கும் நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஷூட்டிங்கிற்காக தளபதி விஜய் ஆந்திராவிற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ஆரவாரம் செய்துள்ளனர். அப்போது அங்கு கேரவனிலிருந்து இறங்கி வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O