நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் மதுரையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படத்துடன் விஜய் படத்தையும் போட்டு வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் மாபெரும் சக்தியாக விளங்குகிறார் நடிகர் விஜய். இவர் இவரது தந்தை இயக்கத்தில் 1992ம் ஆண்டில் வெளியான படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர். பின்னர் கடுமையான உழைப்பு மற்றும் நடிப்புத் திறமையால் இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை.

இன்று விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நல உதவிகளெ பொது மக்களுக்கு செய்து வருகின்றனர். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் அமைப்பாக மாற்றுவதில் விஜயின் அப்பா தீவிரம் காட்டி வந்தார். ஆனால் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையே மனக் கசப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஒரு பேட்டியில் விஜயின் தந்தையே குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் விஜய்க்கு தற்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து விஜயை முதல்வராக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டிய வண்ணம் உள்ளனர். விஜய் தற்போது கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார், மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற படமும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் விஜய. அரசியலுக்கு வரும் சூழல் தற்போது இல்லை என்றும், சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கூறிவந்தனர . இந்த நிலையில் இன்று பிறந்தநாளையொட்டி மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதில் கருணாநிதி, ஸ்டாலினுடன் விஜய் படத்தை போட்டு வாழ்ந்த முதல்வர் மற்றும் வாழும் முதல்வர் அவர்களின் நல்லாசியுடன் வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டள்ளனர்.