Categories: சினிமா

10 பேர அடிக்கிறவன் மாஸ் இல்லை..பெத்தவங்கள பாத்துக்கணும்..விஜயை தாக்கினாரா தனுஷ்?

வெளியிட்டது

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் பேசியது, நடிகர் விஜயை தாக்கி பேசியதாக கூறி சிலர் ட்விட்டரில் கிளப்பி விட, தற்போது தனுஷ் – விஜய் ரசிகர்கள் மோதலாக அது மாறி இருக்கிறது. தனுஷ் நடிக்கும் 44-வது திரைப்படமான திருச்சிற்றம்பலத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. திருச்சிற்றம்பலத்தை இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா என பலர் நடித்துள்ளனர். இந்த இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. தாய்க்கிழவி என்ற குத்து பாடலும், மேகம் கருக்காதா என்ற மெலடி பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய கருத்து சர்ச்சை ஆகி வருகிறது.

இந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ் மாஸ் என்றால் என்ன தெரியுமா? நான்கு பேரை அடிப்பதோ, இல்லை செஞ்சுருவேன் என்று வசனம் பேசுவதோ மாஸ் இல்லை. நாம் குழந்தைகளாக இருக்கும்போது நம்மை கவனத்துடன் பார்த்துக் கொண்ட பெற்றோர், அவர்களுக்கு வயதாகும் போது குழந்தைகளாக மாறிவிடுவார்கள். அப்படி குழந்தைகளாக மாறிய அவர்களை பார்த்துக் கொள்வது தான் உண்மையாலே மாஸ் என்று பேசினார். இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், இவர் விஜயைத் தான் அப்படி கூறியிருக்கிறார் என்று கிளப்பி விட்டு இருக்கின்றனர். இதனால் தனுஷ் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ட்விட்டரில் கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கிக் கொண்டு வருகின்றனர். நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் சில காலங்களாக பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் சமீபமாலமாக பேசிக் கொள்வதில்லை.

10 பேர அடிக்கிறவன் மாஸ் இல்லை..பெத்தவங்கள பாத்துக்கணும்..விஜயை தாக்கினாரா தனுஷ்? 1

சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகரின் எண்பதாவது பிறந்தநாளின் போது அவரும், அவரது மனைவி சோபாவும் தனியாக அமர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலானது. விஜய் ரசிகர்களே, விஜய் நீங்கள் இப்படி செய்வது தவறு தந்தையிடம் பேசுங்கள் என்று கூறினார்கள். பலரும் மேடையில் ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்லும் நீங்களே இப்படி செய்யலாமா என்று விஜய்யை திட்டி தீர்த்து வந்தனர். மேலும் ஒரு பேட்டியின் போது விஜய் ரசிகர் மன்றங்களில் பணம் கொடுத்தால் தான் பதவி கொடுக்கிறார்கள், அதனால் நான் அங்கிருந்து விலகி விட்டேன் என்று பகிரங்கமாக பேட்டி அளித்தார். எஸ் ஏ சந்திரசேகர் தொடர்ந்து விஜய்க்கும், அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் மோதல் போக்கு நடந்து வரும் நிலையில், தனுஷ் அப்பா அம்மாவை பார்த்துக் கொள்வது தான் உண்மையான மாஸ் என்று கூறியது விஜயை தான் கூறினார் என்று கிளப்பி விட்டுள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்