
விஜய் நடித்து வெளியான மின்சார கண்ணா படத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்த குஷ்புவின் தங்கையை விஜய் காதலிக்க பின்னர் அந்த குடும்பத்தில் பாதுகாவலராக வேலைக்கு சேருவார். மேலும், தனது குடும்பத்தினருடன் அதே வீட்டில் பொய் சொல்லி வேலைக்கு செய்து வருகிறார். குஷ்புவின் தங்கையை விஜய் கைப்பிடித்தாரா? என்பது கதை.
இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருப்பார். தேனப்பன் தயாரித்தார். பாரசைட் கதை மின்சார கண்ணா படத்தின் சாயலில் உள்ளதே என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது, அப்படியொரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே நான் தேர்வு செய்ததை எண்ணி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் தேனப்பன்தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
தேனப்பன் அளித்துள்ள பேட்டியில் இந்த பிரச்சினை வெளிநாட்டு விவகாரம். எனவே அதற்குரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இதுகுறித்த எனது முடிவை விரைவில் வெளியிடுவேன் என்றார்.