Categories: சினிமா

மாற்றுத்திறனாளி மாணவர் கொடுத்த பரிசு.! உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய விஜய்.! நெகிழ்ச்சி வீடியோ.!

வெளியிட்டது

மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கொடுத்த பரிசைப் பார்த்து தளபதி விஜய் கண்கலங்கி அழுதுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை இன்று சந்தித்துப் பேசி அவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் வைத்து தளபதி விஜய் இன்று நடத்தினார். விஜயுடன் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். சுமார் 1500 மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டிருந்தனர். சிம்பிளான உடையில் தளபதி விஜய் மேடையில் ஏறி பேசத் தொடங்கினார். கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் தளபதி பேச பேச கைத்தட்டல்களால் ஆரவாரமானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர் கொடுத்த பரிசு.! உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய விஜய்.! நெகிழ்ச்சி வீடியோ.! 1

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் வரும் டயாலாக்கை அவர் மாணவர்களிடம் மேற்கோள் காட்டி பேசினார். அவர் பேசியபோது, “காடு இருந்தா புடுங்கிடுவானுங்க, பணம் இருந்தா எடுத்துக்குவானுங்க, படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது என்ற வசனத்தை அப்படியே பேசிக்காட்டினார். இந்த வசனம் தன்னை மிகவும் பாதித்தது என்றும் இது நூற்றுக்கு நூறு உண்மையானது என்று குறிப்பிட்டார். மேலும் நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் சென்று சொல்லுங்கள், பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அது உங்கள் கையை வைத்தே உங்கள் கண்ணை குத்தும் செயல் என்று அறிவுரை கூறினார். விஜய்க்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று அவரின் ஹேட்டர்ஸ் தற்போது இணையத்தில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்வத்ற்காகாவே இப்படி ஒரு கூட்டத்தை அவர் நடத்தியிருப்பதாகவும் விஜயின் எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஹேட்டர்ஸின் கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை மாஸாக நடத்தி காட்டியிருக்கிறார் தளபதி. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கினார் தளபதி. மேலும் முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர் கொடுத்த பரிசை திறந்து பார்த்தபோது அவர் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார். அதை பார்த்த அந்த மாணவரும் உணர்ச்சிப் பெருக்கில் தேம்பி தேம்பி அழ, விஜயும் உணர்சிவசத்தில் கண்கலங்கினார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்