Categories: சினிமா

“விமர்சனம் செய்தவர்கள் முகத்தில் கறி அள்ளி பூசியுள்ள ஜோசப் விஜய்”!!”வீட்டின் முகப்பிலேயே நச் பதில்”!!

வெளியிட்டது

இந்தியாவில் குறிப்பாக நம்முடைய தென்மாநிலங்களான தமிழகத்திலும், இரண்டு ஆந்திர மாநிலங்களிலும் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாதவை. சினிமாவிலிருந்து நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் அரசியல் பேசுவதையோ, குறியீடுகள் வைப்பதற்கோ ஒருபோதும் யோசித்தது இல்லை. அதே பாணியில் இப்போதுள்ள ரஜினி கூட 25ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பேசிவந்தார். ஆனால் இப்பொது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் முழுநேர அரசியலில் எடுபட முடியவில்லை.இப்போதிருக்கும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய பிடித்தமான நாயகனாகவும், போது வெளியில் வெளிப்படையாக அரசியலை பற்றி மக்களிடம் பேசி வருபவரும் நடிகர் தளபதி விஜய். ஒவ்வொரு படம் அரசியல் பற்றியோ சமூகம் பற்றியோ பேசினால் பிரச்சனை ஆகும் வெளிவரும் போது, ஆனால் இவருடைய படங்கள் வந்தாலே எதோ ஒரு பிரச்சனை தான். ஆனால் அதனையெல்லாம் தாண்டி, இவருடைய படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூலை குவித்து வருகிறது.

"விமர்சனம் செய்தவர்கள் முகத்தில் கறி அள்ளி பூசியுள்ள ஜோசப் விஜய்"!!"வீட்டின் முகப்பிலேயே நச் பதில்"!! 1

நீண்ட காலமாகவே அரசியல் பேசிவரும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என ஒரு இயக்கத்தை உருவாக்கி இருந்தார். 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இப்பொது தீவிர அரசியலில் ஈடுபட துவங்கி உள்ளது. முன்னர் சட்டமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்த விஜய், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வேட்பாளர்களுக்கு நேரடியாக தன்னுடைய ஆதரவை தெவித்தார். மக்கள் சார்பாக போட்டியிட்டவர்கள் 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர், அவர்களை நேரில் சந்தித்தும் நடிகர் விஜய் வாழ்த்து கூறினார்.

இவர் பாடங்களில் சின்னத்தாக பேசப்படும் சில அரசியல் காட்சிகளும் வெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக 2017ஆம் ஆண்டு வெளியான “மெர்சல்” படத்தில் அனைவரும் விமர்சிக்க தயங்கிய GST குறித்து தைரியமாக பேசினார் விஜய். அதுமட்டுமின்றி கோவில் கட்ட முற்பட்டு, அப்போது ஏற்படும் விபத்தால் உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டு “நமக்கு கோவில் தேவையில்லை, இங்கு ஹாஸ்பிடல் வேண்டும்” என கூறுவார்.

அப்போது இந்த இரண்டு விஷயங்களும் பயங்கரமாக விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.காவை சேர்ந்த தமிழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் வெளிப்படையாக படத்தை விமர்சித்தனர். அனைவரையும் மிஞ்சி திரு.ஹெச்.ராஜா அவர்கள் விஜயை “ஜோசப் விஜய்” என பல இடங்களில் பதிவிட்டார். அந்த பேச்சு அன்றைய தினங்களில் மிகவும் பரபரப்பானது.

அன்று முதல் இப்பொது வரை நிறைய இடங்களில் ஜோசப் விஜய் என்று அழைக்கப்பட்டாலும், விஜய் அது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் பொழுது அவர் கொடுத்த பேட்டியில் இயேசு பிள்ளையார் அல்லா என மூவரையுமே நான் வணங்குவேன் என்று கூறியிருந்தார்.

அதனை பலரும் விமர்சித்த வேலையில் இப்பொது உண்மையாக்கும் வகையில் தனது வீட்டின் வாசலில் பிள்ளையார் மற்றும் அம்மன் சிலையை வைத்து புதுப்பித்துள்ளார் விஜய். அதே வேலையில் தன்னை மத ரீதியில் விமரிசனம் செய்திவர்கள் முகத்திலும் கறியைபூசியுள்ளார் நம்ப தளபதி.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்