“டான்ஸ்ல தளபதியா அடிச்சிக்க ஆளில்லை”!!”விஜய்யின் வேகத்திற்கு ஈடு முடியாமல் திணறிய ஜானி மாஸ்டர்”!!

வெளியிட்டது

இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு நடிகர் என்பவர் மேலை நாடுகளிலும் இருக்கும் நடிகர்களிடம் இருந்து வித்தியாசம் அடைபவர். இங்கு ஒரு நடிகர் என்பவர் நடிப்பு, டான்ஸ், சண்டை, காமெடி என நடிப்பிற்கு தேவையான முழு யுக்திகளையும் கொண்டிருக்க வேண்டும். இது ஒரு கோட்பாடே தவிர இது இருந்தால் தான் நடிகனாக முடியும் என்பதில்லை. நடிப்பே ஒரு நடிகருக்கு சிறந்த ஆயுதம். நன்றாக நடிக்க தெரிந்தால் போதும் மற்றவை தானாகவே சரியாகிவிடும்.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"டான்ஸ்ல தளபதியா அடிச்சிக்க ஆளில்லை"!!"விஜய்யின் வேகத்திற்கு ஈடு முடியாமல் திணறிய ஜானி மாஸ்டர்"!! 1

இருப்பினும் நன்றாக நடனமாடக்கூடிய நடிகர்கள் ரசிகர்களிடம் விரைவில் நன்மதிப்பை பெற்றுவிடுகின்றனர். இதில் முக்கியமானவர் விஜய். இப்போது 48 வயதை அடைந்திருக்கும் இவர் நடனம் ஆடுவதில் இந்தியாவில் தலை சிறந்த நடிகராக திகழ்கிறார். எப்போது டான்ஸ் மாஸ்டர்களின் மிகவும் பிடித்த தமிழ் நடிகர் என்றால் அது விஜயே. அவருடைய நடிப்பை பற்றி கூறை கூறும் பலரும் கூட அவருடைய டான்சிற்கு ரசிகர்களே.

ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் “திருமலை”, பிரபுதேவாவுடன் “போக்கிரி, வில்லு” போன்ற படங்களில் அவர்களுக்கு இணையாகவே நடனம் ஆடி இருப்பார். அழகிய தமிழ் மகன் படத்தின் முதல் பாடல் நடனம் இவர் எந்தளவிற்கு சிறந்த நடனமாட தெரிந்தவர் என்பதற்கு நல்ல உதாரணம். அண்மையில் விஜய்  நடிப்பில் வெளியான “பீஸ்ட்” படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் விஜய் நல்ல விமர்சனமே பெற்றார். நடனம், ஆக்ஷன் என இரண்டிலும் இந்த படத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

படம் வெளியாகி 2 மாதங்கள் கடந்துள்ள நிலையில் படக்குழு படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட மேக்கிங் விடியோவை வெளியிட்டது. அதில் “ஜாலியோ ஜிமகானா” பாடல் மேக்கிங்கும் இடம்பெறுள்ளது. அனிருத் இசையில் நடிகர் விஜயே பாடிய இந்த பாடல் ரசிகரகளிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. நடனமும் எப்போதும் போல விஜய் மிரட்டி இருப்பார்.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளவர் பிரபல நடனமைப்பாளர் ஜானி மாஸ்டர். இந்த பாடலில் ஒரு காட்சியில் விஜயும் ஜானி மாஸ்டரும் இணைத்தே நடனம் ஆடுவார்கள். அதன் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு இடத்தில நடனம் ஆடும் பொது விஜயுடன் ஈடுகொடுத்து ஆட முடியாமல் நடுவில் ஸ்டேப் விட்டுவிட்டு தடுமாற விஜய் அசால்ட்டாக அப்டியே ஆடி கொண்டு இருக்கிறார். ஸ்டெப்பை மாஸ்டரே கூட விடலாம் ஆனால் விஜய் விட மாட்டார் என கேப்ஷன் இட்டு ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோ நீங்களும் காண….

Video Courtesy -InbaEvertonCinemas

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்