Categories: சினிமா

வா மாமே ஒரு ரவுண்டு போலாம்.! ஷ்யாமை அழைத்துக்கொண்டு ஜாலி ரைடு போன தளபதி விஜய்..!

வெளியிட்டது

விஜய் வண்டியை ஓட்டிச் செல்ல அவருக்கு அருகில் அமர்ந்து இருக்கிறார் ஷியாம். தற்போது அந்த வீடியோவை ஷ்யாம் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார் ஷியாம். எனவே விஜயும் ஷியாமும் ஒன்றாக இருக்கும் வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் 66-வது படமாக உருவாகியிருக்கும் படம் தான் வாரிசு. இந்த படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு ஷியாம் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வசூல் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வா மாமே ஒரு ரவுண்டு போலாம்.! ஷ்யாமை அழைத்துக்கொண்டு ஜாலி ரைடு போன தளபதி விஜய்..! 1
படம் வெளியாகி இன்றுடன் ஏழு நாட்கள் முடிவடைந்த நிலையில் படம் 210 கோடியை வசூலை பெற்றிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. படத்தை தயாரித்து இருந்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். தமிழ் திரையுலகின் இரு துருவங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் விஜய் அஜித் ஆகிய இருவரின் படங்கள் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகி இருப்பது இந்த முறைதான். இந்த பொங்கல் வாரிசு பொங்கலா? அல்லது துணிவு பொங்கலா? என்ற சர்ச்சையுடன் இரண்டு படங்களும் வெளியானது. இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் பாகங்கள் நீக்கப்பட்டு இருந்தது. இது படத்தின் நீளம் கருதி குறைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் அந்த காட்சிகளை மட்டும் விரைவில் வெளியிட இருப்பதாகவும் அறிவித்திருந்தது.

தொடர்ந்து இரண்டு படங்களுமே வசூலை வாரி குவித்து வருகிறது. இதனால் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் ஷியாம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் புல்வெளியில் ஓட்டப்படும் சிறு வாகனம் ஒன்றை விஜய் ஒட்டிக்கொண்டு செல்ல அவருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார் ஷியாம். அந்த வீடியோவை வெளியிட்டு மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிஸ் கிங்கென தளபதி நிரூபித்திருக்கிறார் என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்