கார்த்தி நடிப்பில் வெளிவந்து Flop ஆன இந்த படத்தின் First Choice விஜய் தான்!

வெளியிட்டது

தமிழ் திரை உலகில் பல இயக்குனர்களில் இளைஞர்களின் மணம் கவர்ந்த இயக்குனர் என கருதப்படும் இவர், பல வெற்றி திரை படங்களை இயக்கியுள்ளார். இளைஞர்களை கவரும் வகையில் இவர் படத்தில் எதார்த்தமான பாடல்களும் டயலாக்குகளும் இருக்கும். இவர் படிப்படியாக முன்னேறி முன்னணி ஹீ ரோக்களை வைத்து படம் எடுக்க தொடங்கினார் வெங்கட் பிரபு. இவரது முதல் திரைபடமான சென்னை 28 ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, இவருக்கென இளைஞர்களிடையே பேமஸ் ஆனார்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்து Flop ஆன இந்த படத்தின் First Choice விஜய் தான்! 1

பின்னர் அந்த வெற்றி பட்டாளத்தை வைத்து கோவா என்னும் படத்தை இயக்கினார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இப்படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இந்தமுறை ஹிட் குடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில், நல்ல கதையோடு தல அஜித் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வைத்து மங்காத்தா எனும் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக திரையரங்குகளில் சக்கபோடு போட்டது. இதன் மூலம் மிக பரபலமான வெங்கட் பிரபு, அடுத்த படத்தை தளபதியை வைத்து இயக்க நினைத்தார்.

ஆம், அடுத்து ரிலிசான பிரியானி திரைப்படம் முதலில் தளபதி விஜயை வைத்து இயக்க நினைத்தார். விஜய் அந்த சமயத்தில் பல படங்களிள் கமிட் ஆனதால் அவரது கால் ஷீட் கிடைக்கவில்லை. அதனால்தான் அந்த சமயத்தில் ரசிகர்களின் மணம் கவர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த கார்த்தியை வைத்து இயக்கினார்.ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த இந்த திரைப்படம், ஹிட் ஆக தவறியது. அடுத்து வெங்கட் பிரபு, விஜயை வைத்து எப்பொழுது இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்