Categories: சினிமா

ராணுவ வீரர்களின் குடும்பங்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்திய தளபதி விஜய்..!

வெளியிட்டது

தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு இனி படத்தில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்து உள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் இலக்கு என கூறிய அவர் யாருடனும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை அண்மையில் விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார் .

ராணுவ வீரர்களின் குடும்பங்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்திய தளபதி விஜய்..! 1

பல லட்சம் ரசிகர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து நடிகர் விஜயை காண கூட்டமாக வருகை தந்து உள்ளனர். மாலை நடைபெறும் மாநாட்டிற்கு காலையிலேயே அனைவரும் வந்ததால், சீக்கிரமாக விஜய் மாநாட்டை நடத்தி உள்ளார்.இந்த மாநாட்டில் தங்களது அரசியல் எதிரிகள் பாஜக மற்றும் திமுக என கூறி இருந்தார். இந்நிலையில் அரசியலுக்கான வேளைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது தனது 69வது படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய், படப்பிடிப்பிற்காக ராணுவ குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்குள்ள அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் ராணுவ வீரர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்