Categories: சினிமா

“என் மகன் எனக்கு கொடுத்த மாமருந்து” உருக்கமாக பதிவிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்.!

வெளியிட்டது

அமெரிக்காவிலிருந்து திரும்பிய நடிகர் விஜய் இன்று தனது தந்தையை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை தற்போது எஸ்ஏ சந்திரசேகர் பகிர்ந்து உருகி இருக்கிறார். ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் “உறவும் பாசமும் தான் மனிதனின் மாமருந்து” என பகிர்ந்திருக்கிறார். பலரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். சில வருடங்களாகவே விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் நிலவி வந்தது. விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது தந்தையிடம் விஜய் பேசுவதையே நிறுத்தி விட்டார் என்றும், அவரைப் பார்க்க வீட்டிற்கு வருவதில்லை என்றும் கருத்துக்கள் எழுந்தது.

"என் மகன் எனக்கு கொடுத்த மாமருந்து" உருக்கமாக பதிவிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்.! 1
அதை மெய்ப்பிக்கும் வகையாக விஜய்யும் தனது தாயை மட்டும் அடிக்கடி சென்று சந்தித்து வந்தார். அந்த புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வந்தது. சமீபத்தில் நடந்த தாய் தந்தையரின் 80-வது திருமணத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. மேலும் எஸ்ஏ சந்திரசேகரின் 80வது பிறந்தநாளுக்கு கூட அவர் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எஸ்ஏ சந்திரசேகர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரை நேரில் சந்தித்து விஜய் நலம் விசாரித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது. விஜய்க்கும் அவரது தந்தைக்கும் பிரச்சனை என்று பலரும் கூறி வந்த நிலையில் விஜய் தந்தையை சந்தித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தனது மகன் தன்னை வந்து சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்த எஸ்ஏ சந்திரசேகர், “உறவும் பாசமும் மனித மனத்தின் மாமருந்து” என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலமாக நீண்ட ஆண்டுகளாக நடந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்பாக தனக்கு ஏற்பட்ட பிரச்சனை இருதய பிரச்சினை குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் ஆடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்