Categories: சினிமா

“அட இதுல என்னங்க இருக்கு, நல்ல தோசைய போட்டு தரேன் வாங்க” – தளபதி விஜயின் பழைய பேட்டியில் நடந்த சுவாரசியம்.

வெளியிட்டது

1990 இறுதிகளில் வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்த நடிகர் விஜய், இன்று தமிழ் திரையுலகில் ஒவ்வொரு முறை அவரின் படம் வெளியாகும் போதும் மற்ற படங்களின் சாதனைகளை மாற்றி எழுதி, தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அட இதுல என்னங்க இருக்கு, நல்ல தோசைய போட்டு தரேன் வாங்க" - தளபதி விஜயின் பழைய பேட்டியில் நடந்த சுவாரசியம். 1

தமிழ் மட்டுமின்றி கேரளாவிலும் இவருக்கென வெறி கொண்ட ரசிகர்கள் ஏராளம். இப்பொது ஆந்திராவிலும் கொஞ்சமாக இருக்கும் மார்க்கெட் பெரிது படுத்த, தெலுங்கு முன்னணி இயக்குனர், தயாரிப்பாளர், இசைமைப்பாளர் மற்றும் நடிகை என அங்குள்ள பெரிய நட்சத்திரங்களை கொண்டு தன்னுடைய அடுத்த படமான T66 படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் மேடைகளில் மட்டும் தோன்றி வந்த விஜய் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்திற்காக 10 வருடங்கள் கழித்து பேட்டி கொடுத்தார். இப்பொது அவருடைய பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. 2000ஆம் வாக்கில் எடுக்க பட்டுள்ள அந்த வீடியோவில், விஜய் சாந்தமாக நெறியாளர் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அதில் நெறியாளர் விஜயுடைய சமையல்காரரிடம் விஜயின் உணவு பழக்கங்களை குறித்து கேட்க அவரும் விஜய்க்கு மிகவும் அசைவு உணவுகள் தான் பிடிக்கும் எனவும் அதனை விரும்பி சாப்பிடுவர் எனவும் கூறியுள்ளார். இதன் நடுவில் ஒரு தோசை கிடைக்குமா என நெறியாளர் கேட்க தளபதி “அட இதுல என்னங்க இருக்கு வாங்க நல்ல தோசையை ஒன்னு போடு கொடுக்குறனே” என கூறி தானே தோசை சுட்டு கொடுத்துள்ளார்.

மேலும் நடிகர் ரஜினி, தன்னுடைய உடல் பயிற்சி குறித்தும் பேசியுள்ளார். இந்த சுவாரசிய பேட்டியை விஜயின் ரசிகர்கள் பெரிய அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Video Courtesy – NMP movies.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்