Categories: சினிமா

குட்டி பெருமாள் வாத்தியாராக களம் இறங்கும் விஜய் சேதுபதி மகன்.? இணையத்தில் கசிந்த புகைப்படம்

வெளியிட்டது

விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமான சூரியா சேதுபதி தற்போது வளர்ந்து அப்படியே விஜய் சேதுபதி போலவே இருக்கும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அடுத்த ஹீரோ ரெடி என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் குழு நடிகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர், பின்னாளில் முண்ணனி ஹீரோவாக மாறியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் குத்துச்சண்டை பார்வையாளராக சினிமாவில் தலைகாட்டத் தொடங்கிய அவர், பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அவருக்கு திறப்பு முனையாக அமைந்த படம் பீட்சா.

குட்டி பெருமாள் வாத்தியாராக களம் இறங்கும் விஜய் சேதுபதி மகன்.? இணையத்தில் கசிந்த புகைப்படம் 1
இதன் பின்னர் அவர் சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, ஜிகர்தண்டா, இறைவி தர்மதுரை, விக்ரம் வேதா, 96 போன்ற பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் பல படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். அவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. உலகநாயகன் கமலஹாசனுக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். கடைசியாக அவர் விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் அவர் பெருமாள் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றார். தற்போது கைவசம் ஹிந்தி படமான ஜவான், வசனமே இல்லாமல் உருவாகியிருக்கும் காந்தி டாக்ஸ், மேரி கிறிஸ்மஸ் போன்ற பல படங்களில் நடித்த வருகிறார். விடுதலை பாகம் இரண்டிலும் அவர் நடித்து முடித்து இருக்கிறார். அவரது மகனும் விடுதலை பாகம் இரண்டில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

வெற்றிமாறனிடம் சூர்யா சேதுபதி கதை கேட்டுக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது. சூர்யா சேதுபதி ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் சில படங்களில் நடித்திருந்த அவர் தற்போது வளர்ந்து இளைஞராக மாறியிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அடுத்த விஜய் சேதுபதி ரெடியாகிவிட்டார் என்று தங்களது வாழ்த்துக்களை சூர்யா சேதுபதிக்கு தெரிவித்து வருகின்றனர். விரைவில் கோலிவுட்டில் ஒரு இளம் ஹீரோ அறிமுகமாக வாய்ப்பிருப்பதாகவும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்