Categories: சினிமா

தளபதி காலில் அணிந்து இருக்கும் காலணி என்ன பிராண்ட் தெரியுமா? அது விலை மட்டும் இவ்வளவா?

வெளியிட்டது

நேற்று பனையூரில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க வந்த விஜயின் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது அவர் அணிந்திருக்கும் செருப்பின் விலை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகிய அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சமீப காலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். பனையூரில் இருக்கும் தனது கெஸ்ட் ஹவுஸில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. நேற்று இரண்டாவது முறையாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து இருந்தார் விஜய். இது அரசியல் ரீதியான சந்திப்போ என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் விஜய் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பதில் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

தளபதி காலில் அணிந்து இருக்கும் காலணி என்ன பிராண்ட் தெரியுமா? அது விலை மட்டும் இவ்வளவா? 1
விஜய்யும் அவரது தந்தையும் வெகு நாட்களாக பேசிக் கொள்வதில்லை. ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பதில் காசு வாங்கிக்கொண்டு சிலர் செயல் படுவதாக எஸ்ஏ சந்திரசேகர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ந்து இதுபோன்று சண்டை சச்சரவு நீடித்து வரும் நிலையில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதற்காக பனையூரில் இருக்கும் வீட்டில் தடபுடல் பிரியாணி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நான்கு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்போது தனக்காக வெகுநேரமாக காத்திருந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை கைகளில் தூக்கியபடி அவர் போட்டோ ஒன்றுக்கு போஸ் கொடுத்திருந்தார். இதை சிலர் விமர்சிக்கவும் செய்தனர். உதவி செய்தால் அதை இது போல் வெளியில் தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது என்று அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகருடன் மோதலிலும் ஈடுபட்டு வந்தனர்.


ஆனால் நெட்டிசன்கள் தற்போது ஒரு படி மேலே போய் விஜய் அணிந்திருக்கும் செருப்பின் பிராண்டும் அதன் விலை பற்றியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர். விஜய் மயாரி பிரிக்கோ ப்ளோர் என்ற மாடல் காலனியை உபயோகப்படுத்துவதாகவும். அதன் விலை 599 ரூபாய் என்றும் இணையத்தில் அதன் விலையை புகைப்படத்துடன் எடுத்து பரவ விட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்