தளபதி ஓட இந்த சூப்பர் ஹிட் பாடல ரீமேக் செய்யணும்! அனிருத்தின் ஆசை

வெளியிட்டது

அனிருத் பாடல்களை ரசிக்காதவர்களே இல்லை என்றே கூறலாம். அவர் அமைத்த பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டு தான். ஒவ்வொரு நடிகருக்கும் ஏற்றாற்போல் மாஸ், மெலொடி பாடல்கள் தருவதில் வல்லவர். ஆல்பம் ஹிட் தருவதில் அனிருத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், போன்ற நடிகர்களுக்கு கலக்கலான இசையமைத்து புகழ் பெற்றார்.

தளபதி ஓட இந்த சூப்பர் ஹிட் பாடல ரீமேக் செய்யணும்! அனிருத்தின் ஆசை 1

தற்போது நடிகர் கமலஹாசன் அவர்களுக்கும் விக்ரம், இந்தியன்−2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படி எல்லா நடிகர்களுக்கும் இசையமைத்து குறுகிய காலத்திலே தனது இசையால் புகழ்பெற்றார். தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்கும் இவர்தான் இசையமைத்து வருகிறார். இது இவர் தளபதி விஜய்யுடன் இணைந்த மூன்றாவது படமாகும். ஏற்கனவே கத்தி, மாஸ்டர் போன்ற விஜய் படத்திற்கு இசையமைத்து அனைவராலும் ரசிக்கப்பட்டது.

நடிகர் விஜய் சமீபத்தில் தனது இரண்டு நாட்களுக்கு முன்பு ஜுன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். பல பிரபலங்கள் தளபதிக்கு தங்களது வாழ்த்தினை சமூக வலைத்தளங்கில் பகிர்ந்தனர். அப்போது அனிருத், விஜய் நடித்த 2004ல் வெளிவந்த கில்லி படத்தின் பாடல்கள் அனைத்தும் தனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசான மாஸ்டர் படத்தில் கில்லி படத்தின் கபடி பாடலை மாஸ்டர் படத்தில் ரீமிக்ஸ் செய்தார் அனிருத். அந்த ரீமிக்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. அதேபோல் மற்றொரு கில்லி படத்தின் பாடலான அர்ஜுனரு வில்லு என்ற பாடலை ரீமிக்ஸ் செய்யவும் ஆசை இருப்பதாக கூறியுள்ளார் அனிருத். அவரது ஆசை கூடிய விரைவில் நிறைவேறினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்