Categories: சினிமா

விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கசிந்தது! அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

வெளியிட்டது
விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கசிந்தது! அதிர்ச்சியில் படக்குழுவினர்!! 1

இளையதளபதி விஜயின் 64 வது படத்திற்கு மாஸ்டர் என பெயர் வைத்துள்ளனர். இதில் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பதாக கதை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் அதனை தொடர்ந்து சென்னை பூந்தமல்லியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியிலும் நடைபெற்றது கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையிலும் முக்கிய சண்டை காட்சிகளையும் படமாக்கினர். தற்போது சென்னையில் சிறைச்சாலையில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறது படக்குழு.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் கதை கொரிய படத்தின் கரு கொண்டு உருவாக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை மறுத்த படக்குழுவினர் கொரிய படத்தின் கதையும் மாஸ்டர் கதையும் வெவ்வேறானவை என்று விளக்கம் தந்தது. இதையடுத்து மாஸ்டர் படப்பிடிப்பு காட்சிகளின் ஒரு சில வீடியோ இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த படப்பிடிப்பு காட்சியில் விஜய்சேதுபதி கேமராவை பார்த்து நடந்து வரும் காட்சி ஒளிபரப்பு ஆகிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் படக்குழுவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பை திருட்டுத்தனமாக எடுத்து வெளியிட்டது யார்? என்ற விசாரணை நடந்து வருகிறது .படத்தின் காட்சிகள் வெளியாகி வருவதை கண்டித்து படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகர் நடிகைகள், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட யாரும் செல்போனை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்