அந்த லிங்க்கை மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க…கதறி அழும் முத்தழகு சீரியல் பேச்சியம்மாள்.!

வெளியிட்டது

தன்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து பணம் பறிக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுவதாக சின்னத்திரை நடிகை லட்சுமி வாசுதேவன் கண்ணீர் மல்க கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “முத்தழகு” என்ற சீரியலில் பேச்சியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லட்சுமி வாசுதேவன். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு கதறி அழுதிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலமாக அறிமுகமானவர் லட்சுமி வாசுதேவன். பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்தார். இந்த தொடர் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி போன்ற சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக பேச்சியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த லிங்க்கை மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க...கதறி அழும் முத்தழகு சீரியல் பேச்சியம்மாள்.! 1

அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு கதறி அழுத்திருக்கிறார். அதில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தனக்கு 5 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த லிங்கை தொட்டவுடன் தனது போன் ஹாக் ஆகியுள்ளது. பின்னர் தொடர்ந்து சில நாட்களாக நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய் லோன் வாங்கி இருக்கிறீர்கள் அதை திருப்பி செலுத்துங்கள் என்று தொடர்ந்து குறுஞ்செய்தி வந்து வந்து கொண்டு இருக்கிறது. மேலும் பல மோசமான தொலைபேசி அழைப்புகளும் தனக்கு வருவதாக கூறினார். மேலும் தன்னுடைய போனை ஹேக் செய்து அதிலிருந்து தனது போட்டோக்களை பதிவிறக்கம் செய்து மார்பிங் செய்து தனது whatsapp தொடர்பில் உள்ள நண்பர்களுக்கும் தனது அம்மா அப்பாவிற்குமே அந்த புகைப்படங்களை அனுப்புகிறார்கள் என்று சொல்லி கதறி அழுதார்.

மேலும் இதுகுறித்து தான் சைபர் டைமில் புகார் அளித்துள்ளதாகவும், இது போல் தேவையில்லாத ஆப்புகளை தரவிறக்கம் செய்து இது போன்ற பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் லட்சுமி வாசுதேவன் கூறியிருக்கிறார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண… கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்