மதுரையில் பிரம்மாண்டமாக வீடு கட்டி இருக்கும் ராமர்.! புதிய வீட்டின் ஹோம் டூர் வீடியோ.!

வெளியிட்டது

விஜய் டிவியில் காமெடியனாக வேலை பார்த்து வரும் ராமர் தற்போது மதுரையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு தனது சக நடிகர்கள் பலரையும் அழைத்து அவர்களுக்கு கிடா விருந்து, கறி சாப்பாடு போட்டு அசத்தியிருக்கிறார் ராமர். பல ஊர்களில் இருந்து விஜய் டிவிக்கு வேலை தேடி வந்து சின்ன சின்ன ரோல்களில் பணியாற்றி இன்று உச்சத்தை அடைந்தவர்கள் பல இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன், புகழ் போன்றவர்களை சொல்லலாம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மதுரையில் பிரம்மாண்டமாக வீடு கட்டி இருக்கும் ராமர்.! புதிய வீட்டின் ஹோம் டூர் வீடியோ.! 1

அந்த வரிசையில் தற்போது முக்கிய காமெடியனாக வலம் வருபவர் ராமர். இவர் அது இது எது, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வந்தார். இவர் கலா மாஸ்டர் போலவும், லட்சுமி ராமகிருஷ்ணாவும் போலவும் பெண் வேடமிட்டு செய்த காமெடிகளை பார்த்து பலரும் வயிறு குலுங்க சிரித்திருக்கின்றனர்.

குறிப்பாக இவர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை அவரைப் போன்றே உடை அணிந்து கொண்டு என்னம்மா நீங்க பண்றீங்களேம்மா என்று சொன்ன வசனம் உலக அளவில் மிகப் பிரபலமானது. அப்போது பலரும் அதை மீம் டெம்ப்ளேட் ஆக பயன்படுத்தி வந்தனர். இந்த வாசகத்தை வைத்து சிவகார்த்திகேயனின் படத்தில் ஒரு பாடல் கூட வந்தது. பிறகு ஆத்தாடி என்ன உடம்பி என்கிற பாடலையும் ராமர் ட்ரெண்ட் செய்து விட்டார். தற்போது கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு, ராமர் வீடு, கேபிஒய் சாம்பியன்ஸ் என அனைத்து காமெடி ரியாலிட்டு ஷோக்களிலும் பங்கெடுத்து தனது திறமையை காட்டி வருகிறார் ராமர். தற்போது தனது சொந்த ஊரான மதுரையில் ராமர் பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்.

இந்த புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு சக நடிகர்களான பழைய ஜோக் தங்கதுரை, நாஞ்சில் விஜயன் போன்றவர்கள் சென்றிருக்கின்றனர். அங்கு அந்த புது வீட்டில் ஹோம் டூர் வீடியோவை அவர்கள் தங்களது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, நல்லி எலும்பு குழம்பு, கறி விருந்து, பிரியாணி என்று புதுமனை புகுவிழாவை கறிசோறுடன் அசத்தியிருக்கிறார் ராமர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video.!

YouTube Video Code Embed Credits: Modern Monkey

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்