விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில நாடகங்கள் முடிவு பெற இருக்கும் நிலையில் தற்போது பல நாடகங்களின் நேரங்களையும் மாற்ற விஜய் டிவி முடிவு செய்து இருக்கிறது. அந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று மௌன ராகம். இந்தத் தொடர் சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருக்கும் இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கதைக்களமும் அதற்கு ஏற்றார் போல் நகர்ந்து வருகிறது. இத்தனை நாள் வில்லத்தனங்களை செய்து வந்த காதம்பரி மற்றும் ஸ்ருதி ஆகியோர் மனம் திருந்தி மல்லிகா மற்றும் சக்தியை ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்னும் தருணும் மனம் திருந்திய ஸ்ருதியை ஏற்றுக்கொண்டு விட்டால் இந்த நாடகம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. தற்போது காதம்பரியை கார்த்திவுடன் வாழ செய்துவிட்டு மல்லிகா வீட்டில் இருந்து வெளியேற திட்டமிடுகிறார்.

ஆனால் கார்த்திக்கோ இருவரும் இதே வீட்டில் இருக்க வேண்டும் நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இதன் இறுதி முடிவு எப்படி இருக்க போகிறது என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் இந்த வாரத்திற்குள் மௌனராகம் தொடர் முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக நம்ம வீட்டுப் பொண்ணு என்கிற சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சில சீரியல்கள் முடிவடைந்து மகாநதி, சிறகடிக்க ஆசை போன்ற நாடகங்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது புது நாடகமாக பொன்னி மற்றும் ஆஹா கல்யாணம் ஆகிய தொடர்கள் வர இருப்பதாக ப்ரோம்களை வெளியிட்டு விஜய் டிவி சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் பழைய தொடர்களின் நேரங்களை மாற்றவும் விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி தற்போது ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் வருகிற மார்ச் 20 ஆம் தேதி முதல் அரை மணி நேரம் முன்கூட்டியே 6 மணிக்கும், 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடர் அரை மணி நேரம் முன்கூட்டி ஆறு முப்பது மணிக்கும், புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ஆஹா கல்யாணம் தொடர் 7:00 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் 7:30 மணிக்கு ஈரமான ரோஜாவே, எட்டு மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ், எட்டு முப்பது மணிக்கு பாக்கியலட்சுமி, 9 மணிக்கு பாரதி கண்ணம்மா ஆகியவை எப்போதும் போல தொடர்ந்து அந்தந்த நேரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியிலும் இருக்கிறார்கள். பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களை மாற்றாமல் இருப்பதால் ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.