Categories: சினிமா

நானே மொதல்ல சூப்பர் ஸ்டார் ரசிகன்டா..! வேட்டையன் படம் பார்க்க வந்த நடிகர் Vijay..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தற்போது பல கோடிகளை இவரது படம் வசூல் செய்து வருவதால், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டு இருக்கிறார். இதனால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என இவரது ரசிகர்கள் கூறி வரவே, ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவாகியது.

நானே மொதல்ல சூப்பர் ஸ்டார் ரசிகன்டா..! வேட்டையன் படம் பார்க்க வந்த நடிகர் Vijay..! 1

லியோ படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான் அதுவும் ரஜினிகாந்த் தான் என கூறி ரசிகர்கள் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார். மேலும் பல பேட்டிகளில் இவர் சூப்பர் ஸ்டார் ரசிகர் என்பதை கூறியதை அதிகம் பார்க்க முடிகிறது. இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நிலவி கொண்டு தான் வருகிறது.

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் வந்து செல்கின்றனர். மேலும் நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி குடும்பத்தினர் படத்தை திரையரங்கில் வந்து கண்டு களித்து இருந்தனர். இந்நிலையில் , நடிகர் விஜய் தேவி திரையரங்கில் வேட்டையன் படத்தை பார்த்து உள்ளார். பார்த்து விட்டு திரையரங்கில் இருந்து காரில் சென்றுள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்