தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர். அக்டொபர் 10ஆம் தேதி ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையில் சன்பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் வீக்கம் இருந்ததால் அதனை அறுவை சிகிச்சை இன்றி சரி செய்து உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய், ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி பிரார்த்தனைகளை தெரிவித்து உள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன் என கூறி உள்ளார்.