ஸ்டைலாக இருக்கும் விஜயின் 66 படத்தின் லுக் வெளியானது

வெளியிட்டது

விஜயின் அடுத்த படம் குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர். மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் குடும்ப கதையை பின்னணியாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் நடிக்கும் விஜயின் லுக் இப்பொது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

வீடியோ காலில் விஜய் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் தளபதி 66 கெட்ப்பா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

கதை, திரைக்கதையில் சறுக்கல் ஏற்பட்டாலும் விஜய் என்ற ஒற்றை மனிதர் பீஸ்ட் படத்தை வெற்றிப்படமாக மாற்றியுள்ளார். ரசிகர்களால் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றாலும், ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

விஜய்யின் கேரக்டர் குறித்தும், திரைக்கதை தொடர்பாகவும் இயக்குனர் நெல்சன் இன்னும் ரிசர்ச் செய்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ரசிகர்களின் பார்வை தற்போது தெலுங்கு டாப் இயக்குனர் வம்சி இயக்கும் தளபதி 66 படத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

அந்த பிரச்சனைகளை இந்த படத்தில் சரி  செய்து நடிகர் விஜய்க்கு வம்ஷி நல்லதொரு வெற்றியை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விஜயுடன் இந்த படத்தில் ரஷ்மிகா, சரத்குமார், யோகிபாபு,ஜெயசுதா,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஷியாம்,ப்ரம்மானந்தம்  என்ற நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

ஸ்டைலாக இருக்கும் விஜயின் 66 படத்தின் லுக் வெளியானது 1

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்