இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது கேப்டன் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சௌந்தர்யா போலவே இருக்கும் நபர் ஒருவரும் செய்திருக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் பலரும் கேப்டனுக்கு தினந்தோறும் அஞ்சலி செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று இணையத்தை ஒரு வீடியோ கலக்கி கொண்டிருக்கிறது.
அதில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் கேப்டனின் ‘தவசி’ பட பாடலான “தந்தன தந்தன தை மாசம்..” என்கிற பாடலுக்கு ரீல்ஸ் ஒன்றை செய்திருந்தார். அந்த ரீல்ஸ்க்கு சௌந்தர்யா போலவே இருக்கும் சித்ரா என்பவர் உடன் ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இணையத்தை இந்த வீடியோ கலக்கி வருகிறது.
பெங்களூருவை சேர்ந்த சித்ரா என்பவர் பார்ப்பதற்கு அப்படியே சௌந்தர்யாவை உரித்து வைத்திருப்பார். சௌந்தர்யாவின் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வரும் அவர், தற்போது விஜயகாந்த் மற்றும் சௌந்தர்யா இருவரும் நடித்த ‘தவசி’ படத்திலிருந்து “தந்தன தந்தன தை மாசம்..” என்கிற பாடலுக்கு விஜய பிரபாகரனுடன் ரீல்ஸ் செய்திருப்பது கேப்டனின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O