Categories: சினிமா

விஜயும் நானும் நல்ல நண்பர்கள்….தனியாக தம் அடிக்கும் போது நான்தான் கம்பெனி – இயக்குனர், நடிகர்,ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்

வெளியிட்டது

நடிகர்கள் அனைவரும் தற்போது தங்களுடைய படங்களில் தம் அடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் வரும் காட்சிகளை தவிர்க்க முனைப்பு கட்டி வருகிறார்கள். இது பெரும்பாலும் ரசிகர்களை தீய வழியில் கொண்டு சேர்த்து விடும் என்பதால் அதனால் அனைத்து நடிகர்களும் இதனை தவிர்த்து வருகின்றனர்.

அதே போல தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இருக்கும் பழக்கங்களையும் வெளியில் சொல்வதை பெரும்பாலும் மறைத்து வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் சில நேரங்களில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விசயங்கள் அங்கங்கே வெளிப்பட்டு விடுகிறது.

விஜயும் நானும் நல்ல நண்பர்கள்....தனியாக தம் அடிக்கும் போது நான்தான் கம்பெனி - இயக்குனர், நடிகர்,ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் 1

நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சாணி கொம்பில் இருப்பவர். அவர் நடித்தாலே போதும் படங்கள் 200,300 கோடிக்கு மேல் மவசூல் எட்டிவிடும் என்ற அளவிற்கு பேர் ரசிகர் கூட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி மற்றும் சர்க்கார் படங்களில் இடம்பெற சிகரெட் பிடிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் இப்பொது நடிக்கும் படங்களில் அந்த காட்சிகள் இடம் பெருவதை அவர் தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர், ஒளிப்பதிவாளர்,இயக்குனர் என சுழன்று கொண்டிருக்கும் திரு. விஜய் மில்டன் அவர்கள் விஜயை குறித்த சர்ச்சைக்குரிய ஒரு விஷத்தை கூறியுள்ளார். தனியார் பேட்டியில் அவர் பேசும் போது, “நானும் விஜயும் நல்ல நண்பர்கள், 2000ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நான் தன அவருடைய படங்களுக்கு கேமரா. அப்போது விஜய் தனியாக தம் அடிக்க போகும் போது நான்தான் அவருக்கு கம்பெனி” என கூறியுள்ளார்.

அது பழைய விஷயம் என்றாலும் இப்பொது இது குறித்து பேச என உள்ளது என பலரும் தங்களது கருத்தக்களை கூறி வருகின்றனர். விஜய் மில்டன் கோலிசோடா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் முன் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கீர்த்தி சுரேஷின் பென்குவின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்