தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். படங்கள் கலவையான விமர்சங்களை பெற்றாலும் இவருடைய ஸ்டார் இமேஜ் படத்தை 200 கோடிக்கு மேல் தொடர்ந்து வசூலிக்க வைத்து வருகிறது. அந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறார் அவர். அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் 200 கோடிக்கும் மேல் வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆந்திராவிலும் தற்போது தனது அடுத்த திரைப்படத்தை முதல்முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போகவே அவருடன் கைகோர்த்து தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய முக்கிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் விஜயை தொடர்ந்து பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் அந்த வகையில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, பிரபு, ஷாம் போன்ற நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய்க்கு அம்மாவாக பிரபல நடிகையை இப்படக்குழு தெரிவுசெய்துள்ளனர்.
காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெயசுதா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து வருகிறார் அவர் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
படக்குழுவும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் நிச்சயம் தளபதி 66 திரைப்படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெறும் ஏனென்றால் விஜய் ஒருவரை தாண்டி இந்த படத்தில் பல ஜாம்பவான்கள் நடிப்பதால் நிச்சயம் அனைத்து தரப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ஒரு புதிய சாதனை படைக்கும் எனவும் கூறி வருகின்றனர்.