Categories: சினிமா

தனது தம்பியின் பிறந்தநாளுக்கு காஸ்ட்லி கிப்ட் வாங்கி பரிசளித்த அண்ணன்.! புகைப்படம் உள்ளே.!

வெளியிட்டது

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் தனது தம்பி சண்முக பாண்டியனுக்காக விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் உலகம் என இரண்டிற்கும் பேரிழப்பாக அமைந்திருக்கிறது விஜயகாந்தின் மறைவு. நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார் விஜயகாந்த்.

தனது தம்பியின் பிறந்தநாளுக்கு காஸ்ட்லி கிப்ட் வாங்கி பரிசளித்த அண்ணன்.! புகைப்படம் உள்ளே.! 1

ஆனால் தொடர் தோல்விகள் அவரை முடக்கி போட்டது. தோல்விகளிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்த அவருக்கு உடல் நிலையும் மோசமாகி போனது. இந்த நிலையில் டிசம்பர் 28ம் தேதி திடீரென காலம் ஆகியிருந்தார் விஜயகாந்த். அவரது மறைவு தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இந்த நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார். அவர் தனது தம்பியின் பிறந்த நாளுக்காக விலை உயர்ந்த போர்ஷே ரக சொகுசு கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்திருக்கிறார்.

இந்த காரின் விலை ஒரு கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. தந்தை இல்லாமல் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க வணங்கினார் சண்முக பாண்டியன். இந்த நிலையில் தற்போது அவர் ‘படைத்தலைவன்’ என்கிற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது அண்ணன் வாங்கி கொடுத்த காருடன் அவர் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்