Categories: சினிமா

மக்கள் செல்வனின் மலையாள படத்தின் டீஸர்.! விஜய் சேதுபதி, நித்யா மேனன் செம்ம Cute காம்போ

வெளியிட்டது

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 19(1)(a) என்ற படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் துணை வேடங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இன்று முண்ணனி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமில்லாம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் கிடைக்கும் அனைத்து வேங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். முக்கியமாக இவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் மிக பொருத்தமாக உள்ளது. சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் விஜய் சேதுபதி. கீழே உள்ள டீசர் வீடியோவை பார்க்கவும்.

மக்கள் செல்வனின் மலையாள படத்தின் டீஸர்.! விஜய் சேதுபதி, நித்யா மேனன் செம்ம Cute காம்போ 1

நடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கும் இவர், கால்ஷூட் இல்லாத காரணத்தால் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகியுள்ளார். மாஸ்டர், விக்ரம், தெலுங்கில் உப்பென்னா படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில் விஜய்சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் இயக்குனர் இந்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் 19(1)(a). இந்த படத்தின் முக்கிய கருவாக கருத்து சுதந்திரம் உள்ளது. இந்த படத்தை ஆன்டோ ஜோசப் பிலிப் கம்பெனி தயாரித்துள்ளது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தின் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த டீசரை நீங்களும் காண.. Watch the teaser below..

Youtube Video Code Embed Credits: Disney hotstar malayalam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்