விஜய் சேதுபதி கருப்பு தோல் கொண்டவர்.. ரித்திக்குடன் ஒப்பிட்டு வன்மத்தை கக்கும் வட இந்தியர்கள்

வெளியிட்டது

விஜய் சேதுபதி-யை உருவ கேலி செய்து வரும் வட இந்தியர்களுக்கு தமிழர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீப காலமாக தமிழில் உருவாகும் படங்களை அப்படியே ஹிந்தியில் ரீமேக் செய்யும் நிகழ்வு நடந்து வருகிறது. தற்போது தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த சூரரைப் போற்று, விக்ரம் வேதா போன்ற படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விக்ரம் வேதாவின் ஹிந்தி டீசர் வெளியானது. தமிழில் ரவுடி கதாபாத்திரத்தில் வேதாவாக விஜய் சேதுபதியும், விக்ரமாக மாதவனும் நடித்து அசத்தி இருப்பார்கள். இதை அப்படியே ஹிந்தியில் ரவுடியாக வேதா கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷனும், போலீஸ் அதிகாரியாக மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர். அதன் அதிகாரப்பூர்வ டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி இருந்தது. அது முதல் தமிழ் ரசிகர்களுக்கும், ரித்திக் ரோஷன் ரசிகர்களுக்கும் வார்த்தை போர் நீடித்து வருகிறது.

விஜய் சேதுபதி கருப்பு தோல் கொண்டவர்.. ரித்திக்குடன் ஒப்பிட்டு வன்மத்தை கக்கும் வட இந்தியர்கள் 1

தமிழில் வேதாவாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் லுக் மற்றும் நடிப்பு திறமை எதார்த்தமாக இருந்ததாகவும், ஆனால் ரித்திக் ரோஷன் ஏதோ மாடல் போல இருந்ததாகவும், ரவுடி லுக் இல்லை என்றும் தமிழ் ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வந்தனர். இந்த மீம்ஸ்களை பார்த்த ரித்திக் ரோஷன் ரசிகர்கள் விஜய் சேதுபதியை ரித்திக் ரோஷன் உடன் ஒப்பிட்டு மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர். அந்த விமர்சனங்களை பார்த்த தமிழ் ரசிகர்கள் கொதித்து போய் ரித்திக் ரோஷனையும் ஹிந்தி ரசிகர்களையும் வசைப்பட தொடங்கி விட்டனர். விஜய் சேதுபதியின் நிறம் மற்றும் உருவத்தை வைத்து அவர்கள் போட்டிருந்த மீம்ஸ்களால் கொதித்து போய் இருக்கும் தமிழ் ரசிகர்கள், ஹிந்தி ரசிகர்களுக்கு தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி மற்றும் ரித்திக் ரோஷனை ஒப்பிட்டு இருக்கும் ஹிந்தி ரசிகர்கள் விஜய் சேதுபதி ஹேண்ட்ஸ்மாக இல்லை, நல்ல உடல் அமைப்பு இல்லை, நடனமாட தெரியாது, தோலின் நிறம் கருப்பு, சுமாரான நடிப்பு என்று விஜய் சேதுபதியை கீழத்தரமாக சித்தரித்தும், ரித்திக் ரோஷன் அம்சமாக இருக்கிறார், நல்ல உடல் அமைப்பு இருக்கிறது, நல்ல தோல் நிறம், வெள்ளையாக இருக்கிறார், நன்றாக நடனம் ஆடுவார் என்று இருவரையும் ஒப்பிட்டு அவர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர். இதை கண்ட தமிழ் ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பிறந்ததால் தங்கள் முற்போக்கு சிந்தனையுடன் இருப்பதாகவும் வட இந்தியர்கள் இன்னும் பிற்போக்கு சிந்தனையிலேயே இருப்பதாகவும் வடக்கான் வடக்கான் தான்யா என்றும் அவர்களின் மீது பறக்கவிட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்