ஈரமான ரோஜாவே சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்.! இவருக்கு பதில் இவர், வெளியான புகைப்படம்

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஒருவர் விலகியுள்ள செய்தி தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இந்த தொடர் சீசன் 1 மிகப்பெரிய வெற்றி அடைந்ததையடுத்து ஈரமான ரோஜாவே பாகம் 2 எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் சீசனில் ஹீரோவாக நடித்த திரவியம், ஜீவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தேன்மொழி எம்பிஏ நாடகத்தில் நடித்த சித்தார்த், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நாடகத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இருவரும் ஏற்கனவே பல நாடகங்களில் நடித்திருப்பதால் இவர்களின் நாடகங்களுக்கு மவுஸ் எப்போதுமே அதிகமாக இருக்கிறது.

ஈரமான ரோஜாவே சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்.! இவருக்கு பதில் இவர், வெளியான புகைப்படம் 1

அதேபோல் இதில் ஹீரோயின்களாக கேப்ரியல்லா, காவியா காதாபத்திரத்திலும் மற்றும் பிரியா திரவியத்திற்கு ஜோடியாக தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை பற்றி இருந்தது ஈரமான ரோஜாவே சீரியல். இதன் ப்ரோமோ வெளியான போதே பலரும் இந்த சீரியலை கடுமையாக தாக்கத் தொடங்கினர். அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி திருமணம் செய்து கொண்டார். தம்பியின் காதலியை அண்ணன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு நெட்டிசன்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த கதையை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

தற்போது வழக்கம் போல இந்த நாடகத்திலும் ஒரு அதிரடி மாற்றம் நடந்துள்ளது. அதில் ஜீவா மற்றும் பார்த்திபனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருணாச்சலமாக நடித்த தாஸ் சீரியலில் இருந்து விலகியுள்ளார். தாஸ் பிண்ணனி பேசுபவராக வேலை பார்த்து வந்தார். இவர் மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கு பிண்ணனி பேசியவர், மேலும் தற்போது மௌனராகம் சீரியலில் கார்த்திக் கிருஷ்ணாவிற்கும் இவர்தான் குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்