விஜய் டிவியின் பிரபல சின்னத்திரை நடிகையாக இருக்கும் கேப்ரியல்லா தற்போது தனது 24-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பலரும் கேபிக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘7-சி’ என்கிற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியல்லா. அதன் பின்னர் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருக்கிறார். தொடர்ந்து ‘சென்னையில் ஒரு நாள்’, ‘அப்பா’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பின்னர் ஜோடி நம்பர் ஒன் ஜூனியரிலும் போட்டியாளராக பங்கெடுத்திருக்கிறார்.
அதன் பின்னர் கேபிக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு ‘ஈரமான ரோஜாவே’ பாகம் இரண்டில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகத்தில் காவியா என்கிற கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தியிருந்தார்.
சமீபத்தில் இந்த நாடகம் நிறைவடைந்த நிலையில் தற்போது கேபி தொடர்ந்து வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் தொடர்ந்து நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது என்று வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அவரின் இந்த வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் கேபிக்கு 24வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.
இதற்காக அவரது தாயார் அவரை அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கேபி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் கேபியின் 24வது பிறந்தநாளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O