ஹாப்பி பர்த்டே புருஷா.! புகழ் பிறந்தநாளுக்கு நாய் குட்டி வாங்கி பரிசளித்த பென்சி

வெளியிட்டது

புகழின் பிறந்தநாளுக்காக அவரது மனைவி பென்சி வேற லெவல் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். தன் கணவருக்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி பரிசளித்து இருக்கிறார். கடலூர் மாவட்டத்தில் இருந்து வேலை வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர் புகழ். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சென்னைக்கு வந்த இவருக்கு சரியான வேலைகள் கிடைக்கவில்லை. இதனால் ஆரம்பத்தில் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். பின்னர் வடிவேல் பாலாஜி மூலமாக இவருக்கு விஜய் டிவியில் காமெடி ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பெண்கள் கெட்டப்பில் மட்டுமே நடித்து வந்தார் புகழ்.

ஹாப்பி பர்த்டே புருஷா.! புகழ் பிறந்தநாளுக்கு நாய் குட்டி வாங்கி பரிசளித்த பென்சி 1

பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலமாக அவருக்கு பல லட்சம் பின் தொடர்பவர்கள் கிடைத்திருக்கிறார்கள். மேலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தல அஜித் உடன் இணைந்து வலிமை படத்திலும், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார் புகழ். சமீபத்தில் அவர் தனது காதலியை திருமணம் முடித்து இருந்தால் அந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் அது இருந்தது.

தற்போது புகழின் பிறந்த நாளை முன்னிட்டு புகழின் மனைவி புகழுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நாய் குட்டி ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். அந்த புகைப்படங்களை பகிர்ந்த புகழ், thanks a lot பொண்டாட்டி, நீ சர்பிரைஸ் என்று ஒன்னு பண்ணியே வேற லெவல் தங்கம் என்று நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Video Code Embed Credits: Serial Lover

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்