TRP ரேட்டிங்கில் பலத்த அடி வாங்கிய நான்கு தொடர்கள்.! விரைவில் எண்டு கார்டு போட உள்ள விஜய் டிவி..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் நாடகம் முடிவடைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் ராஜா ராணி நாடகத்துடன் இணைந்து இன்னும் சில சீரியல்களும் முடிவுக்கு வர இருப்பதாகவும் தற்போது இணையத்தில் தகவல்கள் கசிந்திருக்கிறது. ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே ஒளிபரப்பி கொண்டிருந்த விஜய் தொலைக்காட்சி ஒரு கட்டத்தில் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இணையாக நாடகங்களை ஒளிபரப்பத் தொடங்கியது. ஆரம்பத்தில் சில நாடகங்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த விஜய் டிவி தற்போது முழுநேரமாக பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ராஜா ராணி தொடர் விஜய் தொலைக்காட்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரம்பத்தில் இரவு 9:30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நேரம் மாற்றப்பட்டது.

TRP ரேட்டிங்கில் பலத்த அடி வாங்கிய நான்கு தொடர்கள்.! விரைவில் எண்டு கார்டு போட உள்ள விஜய் டிவி..! 1

நேரம் மாற்றிய பின்பு டிஆர்பி ரேட்டிங்கில் சற்று அடிவாங்கிய தொடங்கி இருக்கிறது ராஜா ராணி தொடர். மேலும் நாடகத்திலிருந்து பலரும் விலகி விட்டதால் நாடகத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. ஆரம்பத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வர, பலரும் இந்த தொடருக்கு ரசிகர்களாக இருந்தனர். பின்னர் ஆலியா கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அவரைத் தொடர்ந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனாவும் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தொடர்ந்து ஆட்கள் மாற்றப்பட்டு கொண்டே இருந்த நிலையில் கடைசியாக சந்தியாவாக ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். பின்னர் அவரும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலக, அடுத்ததாக சீரியலை இயக்கி வந்த பிரவீன் பென்னெட்டும் விலகி இருந்தார். இதனால் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்பட பலரும் இந்த சீரியலை பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். மேலும் இந்த சீரியலின் கதை செல்லும் போக்கும் பலருக்கும் பிடிக்கவில்லை.


ஹிந்தி ரீமேக் சீரியலான என் கணவன் என் தோழன் என்று விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலை மறு உருவாக்கம் செய்துதான் இந்த நாடகம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த கதையில் இருந்த சுவாரசியும் கூட இந்த கதையில் இல்லை. எப்பொழுதும் மாமியாரால் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சந்தியா கொடுமைப்படுத்தப்பட்டு வருவது பலருக்கும் சோர்வை ஏற்படுத்தியது. இதனால் தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த நாடகம் முடிவை எட்டும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இதைத் தொடர்ந்து காற்றுக்கென்ன வேலி, பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் ஆகிய தொடர்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்து இருக்கிறது. இந்த நான்கு சீரியல்களும் வருகிற ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெற்று புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்